நாமக்கல்: தவெக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் நீக்கம்; பொதுச்செயலாளர் ஆனந்த் அதிரடி; என்ன நடந்தது? | Namakkal: Tvk District Secretary Senthilnathan removed; General Secretary Anand takes action

Spread the love

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஜே.ஜே.செந்தில்நாதன். தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள தவெக மகளிர் அணி நிர்வாகி வீட்டில் பெண் நிர்வாகியுடன் தனிமையில் இருந்துள்ளார் செந்தில்நாதன்.

தகவல் அறிந்து வந்த பெண்ணின் உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது, நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனும், பெண் நிர்வாகியும் தனிமையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

செந்தில்நாதன்

செந்தில்நாதன்

மேலும், செந்தில்நாதன் மற்றும் தவெக பெண் நிர்வாகி இருவரையும் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, தவெகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தவெக கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த செந்தில்நாதனை அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கம் செய்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

தவெக மாவட்டச் செயலாளர் ஒருவர் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *