நாமக்கல்: மலைக்கோயிலில் எளிமையாக நடந்த ஐ.பி.எஸ் அதிகாரியின் திருமணம் – young ips officer married in simplicity

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்த் மீனா. இவர், கடந்த 2022-ம் ஆண்டு தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வானார். தற்போது சேலம் புறநகர் ஏ.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சேலம் ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றும் அனுபிரியா மீனாவுக்கும் திருமணம் செய்ய இரண்டு குடும்பத்தினரும் பேசி முடிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து இவர்களின் திருமணம் எளிமையாக இன்று நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் உள்ள மலைக்கோயிலில் நடந்தது. இந்த திருமணத்தில் இரண்டு குடும்பத்திலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

எளிமையாக திருமணம் நடந்தது குறித்து இளம் ஐ.பி.எஸ் அதிகாரி சுபாஷ் சந்த் மீனாவின் நெருங்கிய வட்டாரத்தில் பேசினோம். “ஐஐடியில் படித்த சுபாஷ் சந்த் மீனா,தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான பிறகும் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாகவே வாழ்ந்து வந்தார். அதனால்தான் தன்னுடைய திருமணத்தையும் மலைக்கோயிலில் வைத்து நடத்தியிருக்கிறார். லட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஆடம்பரமாக திருமணம் செய்து கொள்ளும் இந்தக் காலக்கட்டத்தில் சுபாஷ் சந்த் மீனா, எந்தவித பப்ளிசிட்டி இல்லாமல் திருமணத்தை நடத்தியிருக்கிறது” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *