நாளுக்கு நாள் பிரம்மாண்டம்… மம்மூட்டி – மோகன்லால் படம் குறித்து இயக்குநர்!

dinamani2F2025 08 122Ff9ggaci52FCapture
Spread the love

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்து இயக்குநர் பேசியுள்ளார்.

மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். தங்களின் படங்களை இவர்களே தயாரித்தும் வெளியிடுகின்றனர்.

இறுதியாக, மம்மூட்டி நடித்த பசூக்கா அவருக்கு சுமாரான வசூலைக் கொடுத்தது. அதேபோல், மோகன்லாலுக்கு துடரும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து, ஹருதயப்பூர்வம் படத்திற்காகக் காத்திருக்கிறார்.

தற்போது, இவர்கள் இருவரும் இணைந்து ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ படங்களின் இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கத்தில் நடித்து வருகின்றனர். இதில் குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன் தாரா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் மகேஷ் நாராயண், “மம்மூட்டி – மோகன்லால் உடனான திரைப்படம் நினைத்ததைவிட பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்போதுவரை 60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. என்னுடைய தனித்துவமான படமாக்கல் முறையில் ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக இது இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இதெல்லாம் தேவையா தலைவரே? விமர்சனத்திற்கு ஆளாகும் ரஜினி!

director mahesh narayan spokes about his upcoming film with mammootty and mohanlal

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *