நிதியாண்டு 2025 – 26-க்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நாளை முதல் தொடங்குகிறது.
நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், தொடக்க நாளில் மக்களவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். அவரைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார்.
இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமையில் (பிப். 1) நிதியாண்டு 2025 – 26-க்கான மத்திய பட்ஜெட்டை எட்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து, பின்னர் உரையாற்றுவார். இதனைத் தொடர்ந்து, மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பிப்ரவரி 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெறும். மாநிலங்களவையில் இந்த விவாதம் பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும்.