நாளை கடைசி நாள்; ரேஷன் அட்டையில் கைரேகை பதிவு செய்ய வேண்டுமா? வெளியூரில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?|No Fingerprint, No Ration? Deadline Ends Tomorrow!

Spread the love

ரேஷன் அட்டை வைத்திருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்களது கைரேகையைப் பதிவு செய்திருக்க வேண்டும். – இது பல மாதங்களாக கூறப்பட்டு வரும் ஒன்று. ஆனால், இன்னும் பலரும் இதை செய்யவில்லை.

எனது குடும்ப உறுப்பினர் வெளியூரில் இருக்கிறார்… வெளி மாநிலத்தில் வேலை பார்க்கிறார் என்று இதற்கு ஏகப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன.

இவர்கள் எல்லாம் இப்போது கட்டாயம் கவனிக்க வேண்டிய ஒன்று – மத்திய அரசின் உத்தரவின் படி, AAY மற்றும் PHH ரேஷன் அட்டைதாரர்கள் இந்த டிசம்பர் 31-க்குள் கட்டாயம் தங்களது கைரேகையைப் பதிவு செய்திருக்க வேண்டும். அது நாளை தான்.

கைரேகை பதிவு

கைரேகை பதிவு

நீங்களோ, உங்கள் குடும்ப உறுப்பினரோ சொந்த ஊரில் இல்லையா… பரவாயில்லை. நீங்கள் இருக்கும் மாவட்டம் அல்லது மாநிலத்தில், உங்களுக்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைக்குச் சென்று உங்கள் கைரேகையைப் பதிவு செய்து வந்தாலே போதும்.

நாளைக்குள் கைரேகை பதிவு செய்யப்படவில்லை என்றால், என்ன செய்யப்படும் என்று இப்போதைக்கு தெரிவிக்கப்படவில்லை. கைரேகை பதிவு செய்யப்படவில்லை என்றால், ஒருவேளை, ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருள் அல்லது அதன் அளவில் சிக்கல் எழலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *