”இன்று நமது MRB COVID செவிலியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள், 719 செவிலியர்களுக்கான பணி நியமன விழா குறித்து சுகாதாரத்துறை இயக்குநரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அந்த சந்திப்பில், 719 செவிலியர்கள் 2020 முதல் 2022 மார்ச் மாதம் வரை COVID பணியில் பணியாற்றியதற்கான வருகைப் பதிவு, பணியாற்றிய மருத்துவமனையின் சான்று உள்ளிட்ட விவரங்கள் திரட்டப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் 75% விவரங்கள் மட்டுமே சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளதாம்.
குறிப்பாக சென்னை கே.எம்.சி உள்ளிட்ட மற்றும் சில மருத்துவமனைகளில் இருந்து மேற்படி தகவல்கள் டி.எம்.எஸ் அலுவலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என்கிறார்கள்.
கோவிட் சமயத்தில் பணியில் சேர்ந்தவர்கள் பணி நிறைவு பெறும் வரை பணியாற்றிய காலத்தை முழுமையாக சரிபார்த்த பின்னரே நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாலும் தகுதியுடைய செவிலியர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்கப்பட வேண்டும் என அரசு கருதுவதாலும், நாளைய பணி நியமன விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்கிற தகவலைத் தந்துள்ளார்கள்.
சுகாதாரத்துறை வட்டாரங்களில் பேசியபோது, ‘கோவிட் காலத்தில் முழுமையாகப் பணிபுரியாத சிலர் எப்படியோ பணி நியமனம் பெற்று விட்டதாக சில புகார்கள் வரப் பெற்றன. எனவே இந்த முறை அரசு தீவிரமாக விசாரித்து தகுதி உடையவர்களுக்கு மட்டும் பணி கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறது. எனவேதான் இந்தக் கால தாமதம்’ என்கிறார்கள் அவர்கள்.