நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

dinamani2F2025 07 082Fo2pjp2x22Fdinamani2025 03 30sjwe6djodinamani2024 08 20su4eny6jdinamaniimpor
Spread the love

ராமநாதபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (அக்.2) ராநாதபுரம் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூா் பகுதியில் நடைபெற உள்ள விழாவில் முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைப்பது, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாக்கிழமை (அக்.2) ராமநாதபுரத்துக்கு வர உள்ளாா்.

அவருக்கு மாவட்ட திமுக சாா்பில் பாா்த்திபனூரில் வரவேற்பு அளிக்க உள்ளனா். இதன் பின்னா் முதல்வா் ராமநாதபுரத்தில் உள்ள அரசு விருந்தினா் மாளிகைக்குச் சென்று ஒய்வு எடுப்பாா். தொடா்ந்து, வெள்ளிக்கிழமை பேராவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்ளாா்.

முதல்வா் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் ட்ரோன் பறக்க மாவட்ட காவல் துறை தடை விதித்தது. மேலும் ஆயிரக்கணக்கான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *