நியாயவிலை கடைகளில் துவரம் பருப்பு தடையின்றி வழங்க ராமதாஸ் கோரிக்கை  | Ramadoss demands unimpeded supply of duram dal in ration shops

1340756.jpg
Spread the love

சென்னை: பாமக நிறு​வனர் ராமதாஸ் நேற்று தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறி​யிருப்​ப​தாவது: நவம்பர் மாதம் தொடங்கி 22 நாட்கள் ஆகிவிட்ட நிலை​யில், பல நியாய​விலைக் கடைகளுக்கு வெறும் 200 கிலோ துவரம் பருப்பு மட்டுமே வழங்​கப்​பட்​ட​தாக​வும், பெரும்​பாலான கடைகளுக்கு துவரம் பருப்பே வழங்​கப்​பட​வில்லை என்றும் கூறப்​படு​கிறது.

கடந்த சில மாதங்​களாகவே நியாய​விலைக்​கடைகளில் துவரம் பருப்பு முறையாக வழங்​கப்​படாத​தால் கடந்த ஜூன் மாதத்​தில் ரூ.180 ஆக இருந்த ஒரு கிலோ துவரம் பருப்​பின் விலை இப்போது ரூ.210 ஆக உயர்ந்​திருக்​கிறது.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பசியாறு​வதற்கு நியாய​விலைக்​கடைகளில் மலிவு விலை​யில் வழங்​கப்​படும் பருப்பு மிகவும் முக்​கியம் ஆகும். இதை உணர்ந்து கொண்டு அனைத்து நியாய​விலைக் கடைகளி​லும் நவம்​பர் ​மாதத்​துக்கான து​வரம் பருப்பு தடை​யின்​றி​யும், ​தாமதமின்​றி​யும் வழங்​கப்​படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

அமைச்சர் அர.சக்கரபாணி விளக்கம்: இதற்கிடையே அமைச்சர் அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘நவ.2024-ல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் 2,03,84,122 கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது வரை 1,62,83,486 கிலோ வழங்கப்பட்டு 92 சதவீதம் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 68,44,719 கிலோ துவரம் பருப்பு இருப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் 66.91 லட்சம் கிலோ துவரம் பருப்பு கையிருப்பு உள்ளது. அடுத்தாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் சீராக நடைபெற தேவையான 6 கோடி கிலோ துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டர் பாமாயிலுக்கும் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *