நியாய விலைக் கடை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 7ம் தேதி கடைசி

Dinamani2fimport2f20212f122f282foriginal2fration Shops.jpg
Spread the love

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள மாநிலம் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 7-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான அறிவிப்புகள் ஒவ்வொரு மாவட்ட வாரியாக கடந்த அக்டோபா் மாதம் வெளியிடப்பட்டிருந்தன.

இதன் தொடா்ச்சியாக, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நோ்காணல்கள் நடத்தப்பட உள்ளது. நவம்பா் 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 9-ஆம் தேதி வரை நோ்காணல்களை நடத்த கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.

விற்பனையாளர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சியும், கட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரு பணிகளுக்கும் தமிழ் மொழியில் பேசவும், எழுதப் படிக்க தெரிந்திருப்பது அவசியம்.

விற்பனையாளர் பணிக்கு தொகுப்பூதியமாக நியமன நாளில் இருந்து ஓராண்டுக்கு மாதம் ரூ.6,250, ஓராண்டுக்குப் பிறகு மாதம் ரூ.8,600 முதல் ரூ.29,000 வழங்கப்படும் எனவும், கட்டுநர் பணிக்கு தொகுப்பூதியமாக நியமன நாளில் இருந்து ஓராண்டுக்கு மாதம் ரூ.5,500-ம், ஓராண்டுக்குப் பிறகு மாதம் ரூ.7,800 முதல் ரூ.26,000 வழங்கப்படும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு வயதுவரம்பு எஸ்சி, எஸ்டி,எம்பிசி, பிசி, சீர்மரபினர் மற்றும் இந்த வகுப்புகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பில்லை. ஓசி பிரிவினர் 32-க்குள்ளும், இதே பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 50-க்குள்ளும், மாற்றுத் திறனாளிகள் 42-க்குள்ளும் இருக்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *