நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு மெதுவாக பந்துவீசியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து 499 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் நியூசி. 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இரு அணிகளும் மெதுவாக பந்துவீசியதாக 5% போட்டி ஊதியத்திலிருந்து அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன போட்டியின் நடுவர் டேவிட் பூன் தெரிவித்துள்ளார்.
இரு அணிகள் இந்த அபராதத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. புள்ளிகள் கிறைப்பினால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
எத்தனை ஓவர்கள் தாமதமாக வீசப்படுகிறதோ அத்தனை புள்ளிகள் குறைக்கப்படுவது ஐசிசியின் விதி.
இங்கிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது. ஆனால், நியூசிலாந்து அணிக்கு இன்னமும் வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்த அபராதம் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமென கணிக்கப்படுகிறது.