இந்த நிலையில், நியூயார்க்கின் ட்ரைஸ்டேட் பகுதியில் செயல்பட்டு வந்த தொலைத்தொடர்பு கும்பலை அமெரிக்க உளவு சேவை அதிகாரிகள் கண்டுபிடித்து அவர்களின் சதித்திட்டத்தை முறியடித்தனர். நியூயார்க்கில் பரவலாக தகவல் தொடர்பைத் துண்டிக்க மேற்கண்ட கும்பல் சதிச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளதை உளவுப்பிரிவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
300க்கும் மேற்பட்ட சிம் சர்வர்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைப் பய்ன்படுத்தி பல்வேறு இணையதளங்களை முடக்க அவர்கள் முற்பட்டுள்ளனர். இதற்காக அவர்கள் ஐ.நா. பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகாமையில் சுமார் 56 கி.மீ. தொலைவில் முகாமிட்டு செயல்பட்டு வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.