"நிராகரிக்கப்பட்ட காலகட்டத்தைக் கடந்து.!"- கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஹர்திக் உருக்கம்

Spread the love

கிரிக்கெட் பயணத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலானப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” முழு மனதுடன் நான் காதலிக்கும் இந்த விளையாட்டை விளையாடுவதும், அதே விளையாட்டின் மூலம் என் நாட்டுக்குச் சேவை செய்வதும் பெருமையாக இருக்கிறது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். இதுவரை நீங்கள் எனக்கு தந்த ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி.

என்னை நம்பி வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி. இந்தச் சிறப்பான வாழ்க்கையை வாழ வாய்ப்பு அளித்ததற்கும் நன்றி.

என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் இந்த 10 ஆண்டுகள் வெறும் தொடக்கமே…இப்போது தான் என்னுடைய பயணம் ஆரம்பித்திருக்கிறது.

சிறுவயதில் பரோடாவிலிருந்து விளையாட கூடுதல் தூரம் ஓடிய இளம் ஹர்திக்கை நான் நினைத்து பார்க்கிறேன்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

பேட்டிங் பயிற்சி செய்யாதப் பவுலர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசிய ஹர்திக் 19 வயதில் ஒரு ஆல்ரவுண்டரானார்.

கவனிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட காலகட்டத்தைக் கடந்து, என் தேசத்திற்காக விளையாடுவதுதான் எனக்கு மிகவும் மதிப்புமிக்க பயணம்” என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *