பல்பிர் புஞ்ச்
கடந்த ஜூலை 1-ஆம் தேதி 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் கன்னிப் பேச்சு அவர் இப்போது வசிக்கும் பதவிக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள், மக்களவை உறுப்பினர்கள் ஆகியோரை நோக்கி, “நீங்கள் ஹிந்துக்கள் அல்ல’ என்று தேர்தல் பிரசார மேடைகளில் முழங்குவது போல முழங்கினார் ராகுல் காந்தி.
அவர் அவ்வாறு குறிப்பிட்டது ஆளும் தரப்பில் அமர்ந்திருந்த பாஜக உறுப்பினர்களை நோக்கித் தான் என்றாலும், பாஜகவுக்கு வாக்களித்த கோடிக் கணக்கான மக்களையும் சேர்த்தே, அவர்கள் ஹிந்துக்கள் அல்ல’ என்று முத்திரை குத்தியிருக்கிறார் என்று தான் கருத முடியும். ராகுலின் அந்தப் பேச்சு மூன்று உண்மைகளை வெளிச்சம்போட்டுக் காட்டியது.
அவை, வாரிசு அடிப்படையிலான அவரது முன்னுரிமை எண்ணம்; இந்திய பண்பாட்டு நெறிமுறைகள் குறித்த அவரது அறியாமை; ஜனநாயக வழிமுறைகள் மீதான அவரது அவமரியாதை ஆகியவற்றையே அவரது பேச்சு வெளிப்படுத்தியது. ராகுல் காந்தியோ, வேறு யாரேனும் ஒருவரோ. பார் ஹிந்து என்பதை வரையறுக்க முடியுமா? நடந்துமுடிந்த மக்களவைத்தேர்தலில் 23.59 கோடி இந்திய மக்கள் பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பினாலும், பல்வேறு காரணங்களால் வாக்களிக்காதிருந்த பல கோடி மக்களும் நாட்டில் இருக்கிறார்கள். இவர்களில் பலரும் தங்களை ஹிந்துக்கள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்பவர்கள்தான். இவர்கள் அனைவரையும் தனது சிந்தனையற்ற ஒற்றைச் சொல்லால் அடையாளமிழக்கச் செய்திருக்கிறார் ராகுல் காந்தி.
இதுபோன்ற அறிவிப்பை யாரால் வெளியிட முடியும்? எவரையும் விமர்சிக்கத் தனக்கு முற்றுரிமை இருப்பதாக நம்பக் கூடிய ஒருவரால் மட்டுமே இவ்வாறு கூற முடியும். ஆபிரஹாமிய மதங்களைப் போலல்லாமல் ஹிந்து மதம் கால எல்லை களைக் கடந்தது. எனவேதான் இது ‘சநாதனதர்மம்’ என்று அழைக்கப்படுகிறது. யூத மதத்தின் வழித் தோன்றல் மதங் கள் போலல்லாமல், ஹிந்து மதம் பன்முகத்தன்மை வாய்ந்தது. ஹிந்து மதத்தைக் கட்டுப்படுத்த மைய அதிகாரம் கொண்ட எவருமில்லை. மேலும், யார் ஹிந்து இல்லை என்று தீர்மானிக்கவோ, அத்தகைய கட்டளைகளை இயற்றவோ எவருக்கும் உரிமையில்லை.
ஆபிரஹாமிய மதங்களைப் பொறுத்த வரை, அவற்றின் அடையாளங்கள் பல் வேறு விதமாகச் செயல்படுகின்றன. உதார ணமாக, பாகிஸ்தானில் அஹமதியாக்கள் இஸ்லாமிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, மிகக்கொடுமையாகத் துன்புறுத்தவும் படுகின்றனர். ஏனெனில் ஷியா, சன்னி என்ற இரு பெரும் இஸ்லாமிய மதப் பிரிவுகளின் நம்பிக்கைக விலிருந்து சில விஷயங்களில் அஹ மதியாக்கள் வேறுபடுவதை அவர்களால் ஏற்க முடிவதில்லை. தங்களது முரண்பட்ட இறைக்கொள்கைகளுக்காக தொடர் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாரதத்திலிருந்து பாகிஸ்தான் என்ற நாடு மத அடிப்படையில் பிரியக் காரணமான போராட்டங்களில் முஸ்லிம் லீகுடனும் கம்யூனிஸ்டுகளுடனும் இணைந்து முன்னிலையில் இருந்தவர்கள் அஹமதியாக்கள் என்பது வரலாற்றின் முரண்பாடு. அந்த அஹமதியாக்கனைத் தான் இஸ்லாமியர் கள் அல்லர் என்று பாகிஸ்தானிலுள்ள ஷியா, சன்னி இஸ்லாமியர்கள் தற்போது கூறுகின்றனர்.
மக்களவையில் யார் ஹிந்துக்கள் அல்லர் என்று ராகுல் காந்தி சொன்னது இதே போலத்தான் இருக்கிறது…
ஒரு மணிநேரம், 40 நிமிடங்கள் ராகுல் காந்தியின் பேச்சு நீடித்தது. அதில் அவர் முக்கியமாகக் குறிப்பிட்டது. ஹிந்துக்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர் கள் வெறுப்பை விதைப்பவர்களாகவும் வன்முறையையும் பொய்களையும் ஒவ் வொரு நாளும் பரப்புபவர்கனாகவும் உன்ளனர்’ என்பதுதான்.
ராகுல் காந்தி மட்டு மல்ல, வேறு யாரேனும், இதேபோன்ற ஆபத்தான குற்றச்சாட்டை ஹிந்து அல் லாத வேற்றுமதத்தினர் மீது கூறமுடியுமா? உலகின் பல இடங்களில் மதரீதியான தாக்குதல்களில் பயங்கரவாதிகள் ஈடுபடும் போது, அவர்களால் நாட்டு மக்களுக்கு சேதங்கள், நாசங்கள் நிகழும் போதெல்லாம், இவரைப் போன்ற அறிவுஜீவிகள் கூறுவது பயங்கரவாதத்திற்கு மதமில்லை என்பதுதான். ஹிந்துக்களுக்கும் அது பொருந்தாதா,ராகுல் காந்தி அவர்களே… ராகுல் காந்தியின் ஹிந்துக்கள் மீதான குற்றச்சாட்டுகள் எந்த அடிப்படை ஆதாரமும் அற்றவை. அவர் இதனை மக்களவையில் பேசியதால் அவதூறு வழக்கிலிருந்து தப்பிவிட்டார்.
வெறுப்பு குறித்தும் வன்முறை குறித்தும்கூட ராகுல் பேசியிருக்கிறார். அவரது கட்சியின் கடந்த கால மோசமான அனுபவங்களை மறந்துவிட்டு, அவரால் எப்படி இவ்வாறு புனிதராகப் பேச முடிகிறது? வெறுப்பையும் வன்முறையையும் விமர்சிப்பதுபோல, பிரித்தாளும் கருத்தாக்கங்களை விதைத்திருக்கிறார்.
இந்தியர்களை மதம், ஜாதி அடிப்படையில் பிளப்பவர்களுடன்தான் அவர்குலாவுகிறார். அவரது தேர்தல் பிரசாரத்தின் மையமே ஜாதி அரசியலாகத்தான் இருந்தது. வெறுப்பும் பிரிவினையும் இந்தியாவின் சாபக்கேடுகள். சமய நம்பிக்கை அற்றவர்க ளுடனும், கருத்து மாறுபாடு கொண்ட சக மதத்தினரிடையேயும் வன்முறை மற்றும் வஞ்சகத்தைப் பயன்படுத்துவது சிலரது செயல்முறையாகவே மாறி இருக்கிறது. அவர்களைப் பொறுத்த வரை, ஒரே சீரான மதமே அவர்களது இருப்பின் மையப் புள்ளி. அதற்கு முற்றிலும் மாறா னது இந்திய தர்ம நெறிமுறை. இது சமய நம்பிக்கையில் ஒரே சீரான தன்மையை எதிர்பார்ப்பதில்லை; மாறாக நல்லிணக்கத் தையே வலியுறுத்துகிறது.
1947 ஆகஸ்டில் இந்தியாவின் நான்கில் ஒரு பங்கு இஸ்லாமிய தேசியம் என்ற கருத் தாக்கத்தால் பிளக்கப்பட்டது. பாகிஸ் தான் என்பது ஒரு தனிநாடு மட்டுமல்ல; அதுநமதுஎல்லையைச் சூழ்ந்திருக்கும்மத ரீதியான சிந்தனை. 1989-இல் ஜம்மு-காஷ் மீரில் நிகழ்ந்த வன்முறையை சற்றே எண் ணிப் பாருங்கள். பாகிஸ்தானால் நிதியுத வியும் ஆயுத உதவியும் செய்யப்பட்ட மத வாதிகள் அங்கிருந்த காஷ்மீரி பண்டிட் மக்களை வேட்டையாடினார்கள்; அவர்களை சொந்த மண்ணிலிருந்து அகதிகளாகத் துரத்தினார்கள்.
இப்போதும்கூட, அண்மையில் மக்களவைத் தேர்தலில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினரான சையத்ருஹுல்லா மெஹதி, அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவும் 35ஏ பிரிவும் ரத்து செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக 1980-களில் நிகழ்ந்தது போன்று பதிலடி கொடுப்போம் என்று ஒரு நேர்காணலில் வெளிப்படையாக எச்சரித்திருக்கிறார்.
2022 ஜூனில் ராஜஸ்தானில் தையல்கடைக்காரர் கன்னையா லாலும், மகாராஷ்டிரத்தில் உமேஷும் இஸ்லாமிய மதவெறியர்களால் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் மேற்கு வங்க மாநிலம், உத்தர் தீளஜ்பூரில், இளம் ஜோடி ஒன்று ஆளும்கட்சி குண்டர்கனால் தலிபான் பாணியில் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதே மாநிலத்தின் கூச்பிஹாரில், ஜூன் 27ஆம் தேதி, பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட முஸ்லிம் பெண் ஒருவர் ரெளடிகளால் துகிலுரியப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்.
அனீஸ் மியான்- பர்வீன் ஜஹான் (உத்தரகண்ட்- 2022), சமிணா (மத்திய பிரதேசம்- 2023), தஹிரா பானு (ராஜஸ்தான்- 2023) ஆகியோரும் இதேபோன்ற மதவெறியர்களால் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டவர்கனே. இவர்களைப் பற்றியெல்லாம் பொதுவெளியில் நாம் பேசுவதே இல்லை. அவர்களுக்காக ராகுல் காந்தி கண்ணீர் விடுவதில்லை. ஹபீஸுல் ஷேக் மேற்கு வங்கம்- 2024),
ஐசாஸ் அகமது ஷேக் (ஜம்மு- காஷ்மீர்- 2024), பாபர் அலி உத்தர பிரதேசம் 2022), ஷேக்வாஸிம் பாரி(ஜம்மு-காஷ்மீர்-2020) ஆகிய இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டது குறித்தும் நமக்கு எதுவும் தெரியாது. இவர்களைப் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வந்ததில்லை. இவர்கள் அனைவரும் செய்த ஒரே குற்றம், பாஜகவை ஆதரித்ததுமட்டும்தான்.
இங்கு குறிப்பிட்டிருப்பவை சில உதாரணங்கள் மட்டுமே; வெறுப்புக் குற் தங்களின் முழுமையான பட்டியல் அல்ல. வெறுப்பு, வன்முறையின் இந்தக் கொடிய பக்கம் குறித்து ராகுல் சிறிதும் கவ லைப்படுவதாகத் தெரியவில்லை. அதிகார அரசியலின் நிர்பந்தங்களும் அவர் சார்ந்தி ருக்கும் சுருத்தியல் குழலின் தேவைகளும் மட்டுமே, அவரது பேச்சுகளை வடிவமைக்கின்றன. தான் அறுவடை செய்ய விரும்பும் அரசியல் தேவைகளுக்காகவே அவர் பேசு கிறார். எனவே ஹிந்துக்கனை வன்முறை யானர்களாகச் சித்தரித்து அவர் பேசியது வியப்யை ஏற்படுத்தவில்லை.
கேரளத்தின் வயநாடு தொகுதியில் ராகுல் வென்றது முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவால் தான். அதுதான் அவரை இப் படிப் பேச வைத்திருக்கிறது. தேவைப்பட் டால், பூணூல் அணிந்துகொண்டு தன்னை ஒரு பிராமணனாகவும், மேலை நாடுகளில் பயணிக்கும்போது அந்த நாட்டுஊடகவிய லாளர்களிடம் தன்னை இத்தாலிய கத்தோ விக்க வாரிசாகவும், சிறுபான்மை வாக்குக ளுக்காகத் தன்னை முஸ்லிம்களின் தோழ ராசுவும் வேஷம்போட வைக்கிறது.
ராகும் ஒரே சமயத்தில் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது போல நடந்துகொள்ள முயற்சிக்கிறார். இந்த முரண்பாட்டை அவரால் நீண்டகாலம் தொடரமுடியாது.
கட்டுரையாளர்: இந்திய மக்கள் தொடர்பியல் கல்வி நிறுவனத்தின் (ஐஐஎம்சி) முன்னாள் தலைவர்