“நிறைய பேர் ரீலிஸ் போடுறாங்க, ஏன் உங்களை கூப்பிட்டேன் தெரியுமா?- சிறுவர்களை பாராட்டிய ஸ்டாலின் | Stalin Appreciates Children Releasing education Reels

Spread the love

“படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க’ எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடும் சிறுவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் தேவா, ஜீவா. இவர்கள் சோசியல் மீடியாவில் ‘Hi Guys.. நான் உங்கள் தேவா என்ற அறிமுகத்துடன் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர்கள். படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க என இவர்களின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது.

சிறுவர்கள் தேவா, ஜீவா

சிறுவர்கள் தேவா, ஜீவா

தங்களின் கலகலப்பான பேச்சில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், நகைச்சுவையாகவும் வீடியோக்களை வெளியிடும் இவர்களை, முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி, புத்தகங்களை வழங்கி பாராட்டியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *