நிறைவடைகிறது ஹார்ட் பீட் வெப் தொடர்!

Dinamani2f2024 08 132ffl3e42b02fdeepabalau.png
Spread the love

ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹார்ட் பீட் வெப் தொடர் விரைவில் நிறைவடைகிறது.

இந்த தொடரில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தத் வெப் தொடரை டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கிறது, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த தொடருக்கு சரண் ராகவன் இசையமைக்க, விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங் பணிகளை செய்கிறார்.

ஹார்ட் பீட் வெப் தொடர் கடந்த மார்ச் 8 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்களே இத்தொடரின் மையக்கரு.

இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது, இத்தொடர் விறுவிறுப்புடனும், பொழுதுபோக்கு அமசங்களுடனும் சென்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஹார்ட் பீட் வெப் தொடர் நிறைவடையவுள்ளது ரசிகர்களிடையே சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடரை நீட்டிக்குமாறு, இத்தொடர் பார்க்கும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *