தஞ்சாவூர் மாவட்டம், கரந்தைத் தமிழ் சங்கம் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் ர.அபிஷேக் ராணுவத்தின் “அக்னி வீரராக” தேர்வாகியுள்ளார். அபிஷேக்கிற்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துவிட்டு, அவரிடம் பேசத் தொடங்கினோம்.
“நான் லால்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு வரை படித்தேன். 11, 12ம் வகுப்பு அரியலூர் மாவட்டம், கருப்பூர் பொய்யூர்ல படிச்சு முடிச்சேன். கல்லூரி படிப்பை தஞ்சாவூர் கரந்தைத் தமிழ் சங்கத்தில் படிச்சுக்கிட்டு இருக்கேன்.
எல்லோருடைய வாழ்விலும் திருப்புமுனை ஒன்று இருக்கும். என் வாழ்க்கையில ஒரு திருப்புமுனை என்றால், அது என் காலேஜ் தான். ஸ்கூல் படிக்கிற வரைக்கும் என்ன ஆகப் போறேன்… எந்த வேலைக்குப் போகப் போறேன்னு தெரியாமத்தான் இருந்தேன். ஆனா கல்லூரி சேர்ந்ததும் NCC-ல சேர்ந்தேன். NCC மாஸ்டராக கரந்தைத் தமிழ் சங்கத்தின் பேராசிரியர் எம். வசந்த் சார் இருந்தாங்க. என்.சி.சி மாஸ்டர் அவருடைய வாழ்க்கை அனுபவத்தை கேட்டுக் கேட்டு எனக்கு ராணுவ வீரராக வேண்டும் என்று ஆசை வந்தது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன்.