நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க மலைகளில் செய்யப்படும் நெய்லிங் பிராசஸ! | Nailing process done in mountains to prevent landslides!

Spread the love

பொதுவாக நிலச்சரிவானது மலைப்பகுதிகளில் அதிக மழைப்பொழிவு மற்றும் மண் அரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலும் நீலகிரி, கொல்லிமலை, ஏற்காடு போன்ற பகுதிகளிலேயே நிலச்சரிவு அதிகம் ஏற்பட்டு வருகிறது.

பாறைகள் உருள்வது, மரங்கள் சாய்வது, குடியிருப்புகள் சேதப்படுதல், வனவிலங்குகள் பாதிக்கப்படல் போன்ற பல்வேறு பாதிப்புகளை இப்பேரிடர் ஏற்படுத்துகிறது.

இனி இந்தப் பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுக்கும் முயற்சியாக மத்திய அரசு, “நெய்லிங்” என்ற முறையை நாடு முழுவதிலும் உள்ள மலைப்பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மலைப்பகுதிகளில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது பற்றி தெரிந்துகொள்ள நெய்லிங் செய்யும் சைட்டுக்குச் சென்றோம்.

அங்கிருந்த சைட் இன்ஜினீயர் நம்மிடம் பேசும்போது,

“நெய்லிங் முறை என்பது மலைப்பகுதிகளில் குறிப்பாக அதிக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருக்கும் பகுதிகளில் மண்ணை சாய்வாக வெட்டி எடுத்து அதில் 3 மீட்டர் ஆழமும் 2 மீட்டர் அகலத்திலும் ஓட்டையிட வேண்டும். அந்த ஓட்டையின் உள் இருக்கும் தளர்வான மண்ணை மிஷின் மூலம் வெளியே எடுத்த பின்னர் 3 முதல் 5 மீட்டர் நீளமுள்ள அயன்ராடு ஒன்றை உள்ள செலுத்தி அதற்கு மேல் 5 மில்லி மீட்டர் அளவில் சதுர வடிவில் இருக்கும் தகரத்தைப் பொருத்துவதுதான் நெய்லிங் முறை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *