வயநாடு: நிலச்சரிவால் பலரும் தங்களது குடும்பங்களை இழந்துள்ளனர். நாட்டு மக்கள் அனைவரும் உதவ வேண்டும். நிலச்சரிவு தேசத்துக்கு ஒரு பயங்கர சோகம் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
கேரள வயாநாட்டில் நிலச்சரிவால் பாதித்த மக்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் உதவ வேண்டும் என்று கூறியிருக்கும் ராகுல், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் அப்பகுதியில் குடியேற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.