8. இப்போதெல்லாம், எதிர்பாராத பருவ நிலை மாறுதல்களினால் ஏற்படும் பேரிடர் காலத்தில், அதிகமான மழைநீர் வெள்ளம் பெருகெடுப்பு மற்றும் தண்ணீர் தேங்கும் பிரச்னைகளை பெரிய அளவில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இதனால், மழை பெய்தால், நிலம் உள்ள குறிப்பிட்ட இடத்தில், மழைநீர் தேங்குமா? உடனடி மழைநீர் வடிகால் வசதிகள் அங்கு உள்ளதா என்பதைக் கட்டாயம் விசாரித்து விடுங்கள்.

9. விற்பனை நிலத்தின் அருகில், அன்றாட தேவைக்கு வேண்டிய பலசரக்கு சாமான்கள், காய்கறிகள், பழ வகைகள் கிடைக்கக் கூடிய மளிகைக் கடை அல்லது சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் மால், வீட்டு உபகரணக் கடைகள், மெடிக்கல் ஷாப், மருத்துவமனைகள் மற்றும் அது சார்ந்த ஆய்வகங்கள், நல்ல தரம் வாய்ந்த பள்ளிகள், கல்லூரி, பஸ் ஸ்டாப், போக்குவரத்து வசதி, பூங்காகள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் வசதிகள் போன்றவை உள்ளதா என்பதையும் சரி பாருங்கள்.
10. உங்கள் பணியிடம் அருகில் இருக்கிறதா என்பதைப் பாருங்கள். ஒருவேளை, இல்லையென்றால், பணிக்கு இடையூறு இன்றி சுலபமாக சென்று வர தேவையான அனைத்து போக்குவரத்து வசதிகள் உள்ளதா என்பதையும் கட்டாயம் பாருங்கள்”.