நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ‘ஏடி’ பாடல் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் கடந்த பிப். 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். மேலும், அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ், உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் தனுஷும் நடித்துள்ளார்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் ‘ஏடி’ பாடல் விடியோ இன்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.