"நீங்கள் அரசியல் சாசதனைத்தை மாற்றினாலும், மாற்றாவிட்டாலும் இந்தியா இந்து தேசம் தான்" – மோகன் பகவத்

Spread the love

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தங்களது 100-வது ஆண்டைக் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று, கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது…

“சூரியன் கிழக்கில் உதிக்கிறது. இது எப்போது இருந்து நடந்து வருகிறது என்பது நமக்கு தெரியாது. அதனால், அதற்கும் அரசியல் சாசனத்தின் ஒப்புதல் வேண்டுமா… என்ன?

இந்துஸ்தான் இந்துக்களின் தேசம். யாரெல்லாம் இந்தியாவை தங்களது தாய் நாடாக கருதுகிறார்களோ, அவர்கள் இந்தியாவின் கலாசாரத்தைப் போற்றுவார்கள்.

RSS நிகழ்ச்சி
RSS நிகழ்ச்சி

இந்துஸ்தான் நிலத்தில், இந்திய முன்னோர்களைப் போற்றும் கடைசி ஒருவர் இருக்கும் வரை இந்தியா இந்து தேசம் தான். இது தான் சங்கின் கொள்கை.

இந்து தேசம் என்று நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத்தை மாற்றினாலும், மாற்றாவிட்டாலும், அதை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம். ஏனெனில், நாங்கள் இந்துக்கள். எங்களது தேசம் இந்து தேசம். பிறப்பை அடிப்படையாக கொண்ட சாதி அமைப்பு இந்துத்துவாவின் முத்திரை அல்ல” என்று கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *