அந்த நிகழ்ச்சியில் அவர், “இந்தப் படத்தில் மிகக் கடினமான காட்சி என்றால் கதவு காட்சிதான். ராஷ்மிகாவுக்கும் எனக்கும் அந்தக் காட்சி மிகவும் உருக்கமானதாக இருந்தது.
அக்காட்சிதான் படத்தின் விதை. என் சொந்த வாழ்க்கையிலும் நான் பார்த்த ஒன்று அது. இந்த ஒரு காட்சிக்காக நான் ராஷ்மிகாவிடம், ‘நீங்கள் பூமாவைப் போல யோசிக்க வேண்டும் என்று கேட்கப்போவதில்லை. இக்காட்சியில் ராஷ்மிகாவைப் போல யோசிக்கச் சொல்கிறேன்’ என்று சொன்னேன்.
உங்களைப் பலர் துன்புறுத்திய ஒவ்வொரு முறையையும் நினைத்துப் பார்க்கச் சொன்னேன். அத்தனையையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அதை உள்ளிருந்து நடிக்கச் சொன்னேன்.
அந்தக் காட்சி முடிந்ததும் மிகவும் உடைந்து போய் கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 20 நிமிடங்கள் அழுதுகொண்டிருந்தார்.
நான் அப்படி நடிக்கச் சொன்னதால் அவருக்குள் ஆழமாகப் புதைத்து வைத்திருந்த ஏதோ ஒன்று வெளியே வந்தது. அது அவர் பல ஆண்டுகளாக அடக்கி வைத்திருந்த ஒன்று” எனக் கூறியிருக்கிறார்.