உளவியல் ரீதியாக சொல்ல வேண்டுமென்றால், பொதுவாக நிறைய பேர் ஒரு விஷயத்தைச் செய்யும் போது, அது சரியானது என்று நம் மூளை நம்பும். அதனால் நாமும் அதே விஷயத்தைச் செய்வோம். கூடுதலாக சோஷியல் மீடியாக்களில் லைக்ஸ், கமென்ட் கிடைக்கும் போது, நம் மூளையின் ரிவார்டு சிஸ்டம் வேலை செய்து, டோபமைன் என்ற மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்கும். அந்த சிறிய சந்தோஷத்திற்காக ட்ரெண்டை பலரும் ஃபாலோ செய்கிறார்கள்.

“நான் இதை பண்ணலன்னா ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை மிஸ் பண்ணிடுவேனோ’ங்கிற பயம். இந்த பயம், நம்மை பல நேரங்களில் யோசனை இல்லாமல் முடிவெடுக்க வைக்கும். சோஷியல் மீடியாவில் மற்றவர்களின் டிராவல், சக்சஸ் ஸ்டோரி, மகிழ்ச்சியான மனநிலை போன்றவற்றை பார்க்கும் போது, நான் இதை செய்யலேனா, அவுட்டேட்னு சொல்லுவாங்களோனு மனசுக்குள்ள ஒரு பயம் வரும்.
இதனை, ‘ஃபியர் ஆஃப் மிஸ்ஸிங் அவுட்’ என்பார்கள். இந்த எண்ணம் தோன்றும் பட்சத்தில் தேவையில்லாத ஒப்பீடு வரும். கரியர், ட்ரெண்ட், ரிலேஷன் ஷிப் என எல்லாவற்றிலும் ஒரு பரபரப்பு இருக்கும். இதனால் முடிவுகளில் சொதப்பல்கள் வரும். ஆனால் உண்மை என்னவென்றால் எல்லா வாய்ப்புகளும் நமக்கானது இல்லை. பல நேரங்களில் FOMO-வை கட்டுப்படுத்தவது நல்லது.