தேர்வை நடத்துவதில் ‘0.001% அலட்சியம்‘ இருந்தாலும், தேர்வர்களின் கடினமான உழைப்பைக் கருத்தில் கொண்டு தீவிரத்தன்மையுடன் கவனிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு உச்ச நீதிமன்றம் இன்று (ஜூன் 18) மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தி உள்ளது.
நீட்தேர்வு
இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை, மே 5ம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 4ம் தேதியே முடிவுகள் வெளியாகின.
முன் எப்போதும் இல்லாத அளவு இந்த முறை 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண்ணை பெற்றிருந்தனர். அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.
முறைகேடு
இது முறைகேடு நடத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்ற சந்தேகத்தை எழுப்பியது.மேலும் மதிப்பெண்ணிலும் குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து ஏற்கனவே நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவ&மாணவிகளின் போராட்டமும் தீவிரம் அடைந்து உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததை எதிர்த்தும்உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குபோடப்பட்டு உள்ளது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “நீட் நுழைவுத் தேர்வில் 0.001% அலட்சியம்கூட இருக்கக்கூடாது.
அதுபோன்ற அலட்சியம் இருப்பதாக தெரியவந்தால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மற்றம் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்து உள்ளது.
இதையும் படியுங்கள்: