நீட் மாணவி உயிரிழப்பு: “பாலியல் வன்கொடுமைகளை சாதாரணமாக நினைக்கும் சமூகத்தில் வாழ்கிறோம்” – டாப்ஸி வேதனை! |Taapsee Pannu made an angry comment on the mysterious death of a Bihar student.

Spread the love

இந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவியின் உடைகளில் மனித விந்தணு இருப்பது தடயவியல் அறிக்கையில் கண்டறியப்பட்டது. மேலும், உடற்கூறாய்வு அறிக்கையிலும் பாலியல் வன்கொடுமைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மாணவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதுகூட பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவரம் மருத்துவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது போன்ற சந்தேகங்கள், காவல்துறை யாரையோ காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

டாப்ஸி பண்ணு

டாப்ஸி பண்ணு

எனவே, மாணவியின் பெற்றோரின் அதிருப்தியாலும், மக்களின் போராட்டத்தாலும் பீகார் மாநிலத்தின் நிதிஷ் குமார் அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியிருக்கிறது.

இந்த நிலையில், “அஸி’ (Assi) திரைப்பட விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகை டாப்ஸி பண்ணு, இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் ஆவேசமாகப் பேசியுள்ளார். “இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் அன்றைய தினமே இது போன்ற 79 சம்பவங்கள் நடந்திருக்கலாம். சராசரியாக 80 சம்பவங்கள் நாட்டில் நடக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *