கல்வி விருது வழங்கும் விஜய் – நேரலை
நீட் ரத்து கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
நீட் ரத்து கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீட் விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை இணைத்து அனுப்பியுள்ளார்.
ஊட்டி இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு
ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாகவும், இ பாஸ் முறையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கலாம் என அரசு தரப்பு தெரிவித்ததையடுத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நீட்டை எதிர்த்து முழக்கம் – மயங்கி விழுந்த பெண் MP
நீட்டை எதிர்த்து மாநிலங்களவையில் முழக்கமிட்டபோது காங்கிரஸ் எம்பி பூலோ தேவி நேத்தம் திடீரென மயங்கி விழுந்தார்.
மயங்கி விழுந்த எம்பி சிகிச்சைக்காக ராம் மனோகர் லேகியா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
கள்ளச்சாராய உயிரிழப்பு 65ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது.
கருணாபுரத்தை சேர்ந்த பெரியசாமி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுவரை 8ஜிப்மரில் சிகிச்சை பெற்றவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
என்னுயிர் இளவல் அன்புத்தளபதி விஜய்க்கு வாழ்த்துகள் – சீமான்
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ – மாணவியரை அழைத்து பாராட்டு சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துக்கின்ற உன்னதப்பணியை செய்யும் என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் – சீமான் எக்ஸ் தளத்தில் பதிவு
ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஆளுநரிடம் மனு அளித்த பிரேமலதா
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்துள்ளார்.
மாணவர்களை முக்கிய உறுதிமொழி எடுக்க வைத்த விஜய்
கல்வி விருது விழா வழங்கும் மேடையில் பேசிய நடிகர் விஜய் மாணவர்களிடம் முக்கிய உறுதிமொழி எடுக்குமாறு வழியுறுத்தினார். அப்போது போதை பொருள் பயன்படுத்த கூடாது என்று மீண்டும் மீண்டும் சொல்ல வைத்து உறுதிமொழி எடுக்க வைத்தார்.
இங்கு நமக்கு நல்ல தலைவர்கள் தேவை – விஜய்
அரசியலில் மட்டுமல்ல எல்லா துறையிலும் நல்ல தலைவர்கள் தான் தேவைப்படுகின்றனர். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என மாணவர்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் உரை
ஆளப்போறன் தமிழன்… விஜய் வருகையின் போது அதிர்ந்த அரங்கம்
மாணவர்களுக்கு விருது வழங்க மேடைக்கு விஜய் வந்த போது ஆளப்போறன் தமிழன் பாடல் ஒலிக்க மாணவர்கள் ஆரவாரம் எழுப்பினர்.
நெல்லை மாணவர் சின்னத்துரை அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்ட விஜய்
மாணவர்களுக்கு கல்வி விருது வழங்க விழா மேடைக்கு விஜய் வந்த போது நெல்லை மாணவர் சின்னத்துரை அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். சாதிய ரீதியில் தாக்குதலுக்கு ஆளான சின்னத்துரை பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.
மாணவர்கள் விருது வழங்கும் விழா அரங்கிற்கு வந்த விஜய்
முதல் கட்டமாக இன்று 21 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதற்காக நிகழ்ச்சி நடைபெறும் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக வெற்றிக் கழக தலைவராக முதல்முறையாக மாணவர்களுக்கு விருதுகளை வழங்குகிறார் விஜய்.
அதிகாலையே மண்டபத்திற்கு வந்த விஜய்
மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவிற்காக அதிகாலையிலேயே மண்டபத்திற்கு விஜய் வந்துள்ளார். கடந்த முறை ஏற்பட்ட சிக்கல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக அதிகாலையே வந்துள்ளார்.
என்ன பேசப்போகிறார் விஜய்?
கடந்த ஆண்டு நடந்த விழாவில் அம்பேத்கரையும், பெரியாரையும் படியுங்கள் என மாணவர்களுக்கு விஜய் அறிவுரை வழங்கிய நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் மாணவர் சந்திப்பில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாணவர்களுக்கு இன்று ஊக்கத்தொகை
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு நடிகர் விஜய் நடத்தும் பாராட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. கட்சி தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் மாணவர் சந்திப்பு என்பதால் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
- First Published :