நீட் வினாத்தாள் கசிவு; குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது

Dixit Patel
Spread the love

இளங்கலை மருத்த படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் பல்வேறு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Students

நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும்

இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் புயலை கிளப்பி உள்ளது. காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சியினர் இந்த நீட் வினாத்தாள் கசிவு, முறைகேட்டில் தொடர்புடைய அனைவரும் கைதுசெய்யப்படவேண்டும், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. மாணவர்களும் இந்தியா முழுவதும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே நீட் வினாத்தால் வெளியான விவகாரம் தொடர்பான விசாரணை கடந்த வாரம் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. உடனடியாக அதிரடி விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ. 5&க்கும் மேற்பட்டோரை கைது செய்து உள்ளது.

Cbi

பள்ளி உரிமையாளர் கைது

இந்த நி¬யில் நீட்ஜி தேர்வில் முறைகேடு செய்ததாக, குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் என்றதனியார் பள்ளியின் உரிமையாளர் தீட்சித் பட்டேலை மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) இன்று(ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தது.

இன்று அதிகாலை அவரை வீட்டில் இருந்தபோது கைது செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவரை அகமதாபாத்தில் உள்ள கோர்ட்டில் ஆஜர் படுத்த உள்ளனர்.அவர் கொடுத்த தகவலின் படி மேலும் சிலர் நீட் தேர்வு விவகாரத்தில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒயாசிஸ் பள்ளியில் இருந்து

கடந்த மே 5 ந்தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டபோது ஜெய் ஜலாராம் பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹசாரிபாக்கில் உள்ள ஒயாசிஸ் பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர், பத்திரிக்கையாளர் ஒருவரையும் சி.பி.ஐ. கைது செய்தது குறிப்பிடத்தக்கது.ஒயாசிஸ் பள்ளியில் இருந்து நீட் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு இருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிரிக்கெட்டில் ஜடேஜா பங்களிப்புக்கு மோடி பாராட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *