நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

Dinamani2f2025 04 202fzuu893ex2fduraimurugan.jpg
Spread the love

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 761 பயணாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகட்டும் ஆணையை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி

பின்னர் அவரிடம் நீட் ரகசியம் எங்களுக்கு தெரியும் என கூறி தமிழக மக்களுக்கு துரோகம் விளைவித்த திமுகவால் 22 மாணவர்கள் உயிரிழந்ததாக திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் சனிக்கிழமை முதல் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு, அவர்களுக்கு தைரியம் இருந்தால் இது குறித்து சட்டப்பேரவையில் பேச சொல்லுங்கள் என பதிலளித்தார்.

மேலும், 2026 இல் இறைவன் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப போகிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருந்தது குறித்து கேள்விக்கு, “ஐயோ பாவம்” என சிரித்தபடி பதிலளித்து சென்றார் அமைச்சர் துரைமுருகன்.

மிஸ்பண்ணிடாதீங்க… அங்கன்வாடி மையங்களில் 7,783 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *