இளைஞர்கள், திருமணமாகாத ஆண்கள், இன்னும் குழந்தைப் பெறாத ஆண்களுக்கு விந்துப்பை, விந்தணுக்கள் தொடர்பான சில டிப்ஸ் தருகிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

லேப்டாப்பை மடியில் வைத்து வேலைபார்ப்பதால், ஆணுறுப்புக்கு நேரிடையாக மிகப்பெரிய பாதிப்பு வராது என்றாலும், விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும். விந்துப்பைகள் உடம்பிலிருந்து கீழே தொங்குவதற்கு காரணம், அது 35 டிகிரி வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். மடியில் லேப்டாப் வைத்து வேலைபார்க்கும்போதும், விந்துப்பையின் வெப்பநிலை அதிகரித்து, விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும்.