இந்நிலையில், ஜூலியின் வருங்காலக் கணவரைத் தேடி விசாரணையில் இறங்கினோம். “‘அவரு பேர் முகமது. ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்தி வர்றார். விளம்பரப்படங்களும் எடுப்பார். சமீப சில வருடங்களாக ஜூலிக்கும் அவருக்குமிடையில் நட்பு இருந்தது. அது எப்ப காதலாச்சுன்னு தெரியலை, இப்ப முறைப்படி உலகத்துக்கு அறிவிசிருக்காங்க” என்கின்றனர் ஜூலி மற்றும் அவரின் வருங்காலக் கணவர் முகமது இருவரையும் தெரிந்த சிலர்.
ஜூலியின் வருங்காலக் கணவரான முகமதுவையே தொடர்பு கொண்டு வாழ்த்து சொன்னோம்.
”ரொம்ப நன்றிங்க என்றவர், கல்யாணம் குறித்து எல்லாருக்கும் சீக்கிரமே ரெண்டு பேரும் சொல்றோம். இப்ப ஷுட்டிங்ல இருக்கேன். முடிஞ்சதும் டீடெய்லா பேசறேன்” என்றபடி திருமணத் தகவலை உறுதி செய்தார்.