இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பிரசன்னா பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான மனுதாரர் மணி, “நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்காக அவர் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுகிறார். அவருக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதோடு போராட்டங்களும் நடத்தப்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும்” என வாதம் முன் வைத்தார்.
குறிப்பாக யூடியூப்பர்கள் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறையும் அல்லது தமிழக அரசு எடுப்பதில்லை எனவும் வாதிட்டார்.

அப்போது பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `தமிழ்நாடு அரசு சார்பிலான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனரா?” என கேள்வி எழுப்பியதோடு, `நீதிபதிக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவது, அவருக்கு எதிராக அவதூறு பரப்புவது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது?’ என கேள்வி எழுப்பினர்.
`ஒரு குறிப்பிட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கினார் என்பதற்காக நீதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவது, போராட்டம் நடத்துவது உள்ளிட்டவை தடுக்கப்பட வேண்டும்’ என கூறிய நீதிபதிகள், `இந்த விவகாரத்தில் ஏராளமான புகார் கடிதங்கள் கொடுக்கப்பட்டும், ஏன் அதன் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது?’ என கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய மனுதாரர் மணி, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த காரணத்தினால் மட்டுமே யூடியூபர்கள் அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்கள. ஆனால் அதனை தமிழக காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதாக” குற்றம் சாட்டினார்.