சென்னை: தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்: தேங்கிய நீர், அசுத்தமான அல்லது மாசடைந்த நீரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் குளிக்கக்கூடாது. குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் தூய்மையான சூழலில் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். தனியார் மற்றும் அரசு நீச்சல் குளங்கள் அனைத்தும் அரசு வழிகாட்டுதலின்படி தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
தண்ணீரில் குறிப்பிட்ட அளவு குளோரின் கலந்திருத்தல் வேண்டும். மூளையழற்சி அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருபவர்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். உயர்சிறப்பு சிகிச்சைகள் தேவைப்படுபவர்களுக்கு, அந்த வசதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.