நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகக் கடுமையான உறைபனி நிலவி வந்த நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
நேற்று காலை முதல் மந்தமான காலநிலை நிலவி வந்த நிலையில், இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழைப்பொழிவு தொடங்கியது.

குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 215 மி.மீ, கோத்தகிரியில் 114 மி.மீ , குன்னூர் புறநகர் 90 மி.மீ என மாவட்டத்தில் 980.6 மி.மீ மழை ஒரே இரவில் பதிவாகியுள்ளது.
கனமழைப்பொழிவு காரணமாக குன்னூர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.