நீலகிரி: தோட்ட தொழிலாளர் வம்சாவளி டு அரசு செலவில் மலேசியாவில் உயர்கல்வி! – அசத்தும் அரசு பள்ளி மாணவி

Spread the love

மாணவி பிரேமா குறித்து நம்மிடம் பேசிய புளியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், “மாணவி பிரேமா பத்தாம் வகுப்பு படிக்கும்போதே பாடங்களை நன்கு புரிந்து படிக்கக்கூடிய திறன் பெற்றவர். ஆசிரியர்களிடம் உரிமையுடன் சந்தேகங்களைக் கேட்டு பாடங்களைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்றவர். அரசின் மாதிரிப் பள்ளியில் படிக்கிற போது வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வி படிப்பேன் என்று உறுதி கூறியிருந்தார்.

மாணவி பிரேமா

மாணவி பிரேமா

தமிழ்நாடு அரசின் முழு செலவில் மலேசியாவில் உள்ள அல் புகாரி இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான்காண்டு பொறியியல் படிப்பான தரவு அறிவியல் கல்வியை பயில இருக்கிறார். அயராத உழைப்பாலும் கல்வி மீதான அதீத ஈடுபாட்டாலும் இன்றைக்கு அதை சாத்தியமாக்கியிருக்கிறார். அரசு பள்ளியில் பயின்றால் எந்த உச்சத்தையும் அடையலாம் என்பதற்கு மாணவி பிரேமா நல்ல முன்னுதாரணம்” என்றார்.

வாழ்த்துகள் பிரேமா!!!

தேயிலை தோட்டத்துச் சிறு செடி, விருட்சமாகி வான் தொடட்டும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *