நீலகிரி: படுகர் இன மக்களுடன் நடனமாடிய பிரேமலதா விஜயகாந்த் | premalatha vijayakanth coonoor visit

Spread the love

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனரான நடிகர் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக உருவெடுத்திருக்கிறார் அவரின் மனைவி பிரேமலதா.

விஜயகாந்த் வாழ்ந்த காலத்திலும் அவருடன் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபட்டு வந்தவர் என்றாலும், வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தன்னையும் தனது இயக்கத்தின் இருப்பை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

படுகர் இன மக்களுடன் பிரேமலதா விஜயகாந்த்

படுகர் இன மக்களுடன் பிரேமலதா விஜயகாந்த்
கே.அருண்

இதன் வெள்ளோட்டமாகவே “உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு நேற்று சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முன்னதாக மாவட்ட செயலாளரின் கிராமமான கோடமலை படுகர் கிராமத்திற்குச் சென்று அந்த மக்களைப் போன்றே உடையணிந்து அவர்களுடன் சேர்ந்து நடனமாடியும் மகிழ்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *