நீலகிரி: பள்ளத்தில் சரிந்த யானை; இரண்டு தந்தங்களை மட்டும் மீட்ட வனத்துறை; என்ன நடந்தது? | Nilgiris: Elephant falls into a ditch; Forest Department recovers only two tusks

Spread the love

இந்த நிலையில் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட காட்டி மட்டம் பகுதியில் வனத்துறையினர் நேற்றுமுன்தினம் ரோந்து மேற்கொள்கையில் பள்ளத்தாக்கு பகுதியில் யானையின் எலும்புக்கூடு கிடப்பதைக் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இரண்டு யானை தந்தங்களை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட தந்தங்கள்

மீட்கப்பட்ட தந்தங்கள்

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், “காட்டி மட்டம் வனப்பகுதியில் யானையின் உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்தோம். கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடல் பாகங்களைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.

நிலைத்தடுமாறி விழுந்த ஆண் யானை மேலே எழ முடியாமல் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். இரண்டு தந்தங்களை மட்டும் முழுமையாக மீட்க முடிந்தது. இறப்புக்கான முழுமையான காரணம் உடற்கூராய்வு முடிவுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்படும்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *