நீலகிரி: பாரம்பரிய முறைப்படி விமர்சையாக நடந்த பொக்காபுர மாரியம்மன் கோயில் திருவிழா! | Nilgiris Pokhapura Amman Festival Worship

Spread the love

நீலகிரி மாவட்டம் வனப்பகுதிகளுக்குட்பட்ட மசனக்குடியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பொக்காபுரம் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்திலிருக்கும் பொக்காபுர மாரியம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது.

இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளிருந்து மக்கள் வருகை தருகின்றனர்.

நான்கு நாட்களாக நடைபெறும் திருவிழாவில், முதல்நாள் நிகழ்வாக அதிகாலை 5 மணிக்கு காப்புக்கட்டுகிறார்கள். காப்புக் கட்டின் போது பொக்காபுர மாரியம்மனை குளத்திற்கு எடுத்துச் சென்று, அம்மனை நீராட வைத்து, அலங்காரம் செய்து கோவிலுக்கு எடுத்து வந்து வழிபடுகின்றனர்.

இதில் பொக்காபுர மாரியம்மன் திருவிழாவினை நடத்தும் பழங்குடியின மக்கள் தவிர மற்றொரு பழங்குடியின மக்கள் காம்பெட்ரா ஐயன் ஆலையத்திலிருந்து வந்து பூஜை செய்து அம்மனை பெட்டியில் வைத்து குளத்திற்கு எடுத்துச் செல்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *