“நீ கருப்பாக இருக்க…” – காதலனுடன் சேர்ந்து கனவனைக் கொன்றுவிட்டு கதறி அழுத மனைவி; சிக்கியது எப்படி? | “You Are Unworthy of Me Because You Are Dark”: Wife Murders Husband with Lover, Then Weeps Hysterically

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் புரோஹித்(28) என்பவர் வீட்டில் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். அவரது உடலில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன.

புரோஹித் மனைவி பிரியங்கா போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து கணவனைக் கொன்றுவிட்டு வீட்டில் இருந்த ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களைத் திருடிச்சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் பிரியங்காவிற்கும், அவரது கணவருக்கும் இடையே திருமண உறவில் சிக்கல் இருந்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

புரோஹித் சகோதரி ஜோதி போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், “‘பிரியங்கா எனது சகோதரனைப் பார்த்து நீ கருப்பாக இருக்கிறாய், நீ எனக்கு தகுதியற்றவன் என்றும், உன்னைவிட தகுதியான ஒருவருக்கே நான் தகுதியானவள் என்றும் கூறி அவமானப்படுத்தினார்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் பிரியங்காவிற்கு கமலேஷ் என்பவருடன் திருமணம் தாண்டிய உறவு இருந்தது தெரிய வந்தது. இருவரும் சேர்ந்து தங்களது உறவுக்குத் தடையாக இருந்த புரோஹித்தைக் கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

பிரியங்கா

பிரியங்கா

இதற்காக கமலேஷ் தனது நண்பர் சுரேந்திராவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஒரு லட்சம் கொடுத்து புரோஹித்தைக் கொலை செய்ய முடிவு செய்யப்பட்டு ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுக்கப்பட்டது.

சம்பவம் நடந்த அன்று வேண்டுமென்றே பிரியங்கா வீட்டு கதவைச் சரியாகப் பூட்டாமல் வைத்திருந்தார். அதனைப் பயன்படுத்தி சுரேந்திரா வீட்டிற்குள் நுழைந்து உறங்கிக்கொண்டிருந்த புரோஹித்தைத் தாக்கினார். இக்குற்றச் செயலை ஒரு கொள்ளை சம்பவம்போலக் காட்ட, அறையைச் சூறையாடி, அங்கிருந்த விலைமதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனதாக பிரியங்கா நாடகமாடினார்.

தாக்கியவர்கள் தப்பிச் சென்ற பிறகு, தன்னை கொள்ளையர்கள் கட்டிப்போட்டுவிட்டு பொருட்களைக் கொள்ளையடித்து சென்றுவிட்டதாக பிரியங்கா நாடகமாடினார்.

ஆனால் போலீஸார் விசாரித்தபோது பிரியங்கா அடிக்கடி தனது வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். இதனால் போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. போலீஸார் கொலை நடந்த வீட்டில் சோதனை செய்தபோது கொள்ளையர்கள் திருடி சென்றுவிட்டதாகக் கூறப்பட்ட நகைகள் அந்த வீட்டில் இருந்து மீட்கப்பட்டது.

அதோடு சம்பவம் நடந்த அன்று பிரியங்கா அடிக்கடி கமலேஷுடன் போனில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். இதையடுத்து பிரியங்காவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது உண்மையை ஒப்புக்கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *