"நூற்றுக்கணக்கான நடிகர்கள்; 100 நாட்கள் படப்பிடிப்பு!"- ‘பள்ளிச்சட்டம்பி’ படம் குறித்து டொவினோ தாமஸ்

Spread the love

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி இருக்கிறார்.

ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (மார்ச்.30) நடைபெற்றது. இதில் டொவினா தாமஸ் கலந்துகொண்டார்.

‘பள்ளிச்சட்டம்பி’
‘பள்ளிச்சட்டம்பி’

“2018 ஆம் ஆண்டே இப்படத்தின் கதையை பற்றி நானும், டிஜோ ஜோஸும் (இயக்குநர்) விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை வடிவமைத்து 2025-ம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம்.

நாங்கள் இருவரும் வேறு வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தோம். அதனால் இப்படத்தின் பணிகளை தொடங்க தாமதம் ஆனது. நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது.

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. இது ஒரு பீரியட் மூவி.

1957- 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும். இது உண்மைச் சம்பவம் அல்ல.

டொவினோ தாமஸ்
டொவினோ தாமஸ்

ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *