இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “எந்தவொரு நாட்டின் எதிர்காலத்தையும் உருவாக்குவதில் நூலகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நூலகர்களின் முயற்சியால் வரும் நாட்களில் இந்த நூலகங்களில் வாசகர்களின் எண்ணிக்கை 30% அதிகரிக்கப் போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள பிப்லஜ் கிராமம் அருகே ஜிண்டால் நகர்ப்புற கழிவு மேலாண்மை அமைப்பு நிறுவிய 15 மெகாவாட் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலையையும் மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.