மக்களை கவர்ந்திழுக்கும் தனித்துவமிக்க தம் கலை ஆற்றலால் திரைத்துறையில் இது வரை யாரும் சாதித்திடாத வகையில் தொடர் வெற்றி நாயகனாக 50 ஆண்டுகளாக திகழும் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் கலைப்பணி மிகுந்த போற்றுதற்குரியதாகும்.
திரைக்கலையில் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் அயராத உழைப்பும், ஒப்படைப்பும் திரைத்துறை மட்டுமின்றி எத்துறையிலும் சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறை பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய ஆகச்சிறந்த வாழ்வியல் பாடமாகும்.
‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது பெற்றுள்ள ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நெகிழ்ந்த அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.