அமெரிக்காவின் கிழக்கு நெப்ராஸ்காவில் சிறிய ரக விமானம் ஆற்றில் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறிய ரக விமானம் பிளாட் ஆற்றின் வழியாகப் பயணித்துக்கொண்டிருந்தபோது வெள்ளிக்கிழமை இரவு 8.15 மணியளவில் ஃப்ரீமாண்டின் தெற்கே ஆற்றில் விழுந்து நொறுக்கியது. டாட்ஜ் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் ப்ரீ ஃபிராங்க் அதிகாரி ஒருவர் செய்தியாளர் சந்திப்பின்போது இந்த தகவலைத் தெரிவித்தார்.
ஆற்றில் விழுந்த மூவரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். இறந்தவர்களின் அடையாளங்களை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை.
ஒமாஹாவிலிருந்து மேற்கே சுமார் 59.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஃப்ரீமாண்ட் அருகே பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மேற்பார்வையிட்டு விசாரணையைத் தொடங்க உள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.