‘நெருங்கும் திமுகவின் டெட்லைன்; காத்திருக்கும் விஜய்யின் தவெக!’ – என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்?

Spread the love

திமுக தரப்பில் காங்கிரஸூக்கு ஒரு ராஜ்ய சபா சீட்டை கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். இதை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு உறுதி செய்தார்.

ஆனால், திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியானால் மட்டுமே காங்கிரஸூக்கு திமுக அந்த ராஜ்ய சபா சீட்டை கொடுக்கும். மார்ச் 5 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், மார்ச் 3, அதாவது நாளைக்குள் கூட்டணி குறித்து உறுதியான முடிவை கூறுமாறு அறிவாலயம் தரப்பில் காங்கிரஸூக்கு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் குழு

காங்கிரஸ் குழு

ஆனால், இப்போது வரைக்கும் காங்கிரஸ் ஒரு முடிவை எடுத்ததைப் போன்றே தெரியவில்லை. “கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றது’ என அறிவாலயத்தில் வைத்து செல்வப்பெருந்தகை பேசினாலும், டெல்லி சென்று ’25 இடங்களுக்கெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது’ என சோடங்கர் பேசுகிறார்.

27 அல்லது 28 இடங்கள் வரைக்கும் கொடுக்க திமுக முன்வருமென தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது காங்கிரஸூக்குமே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலுமே கடைசி நிமிடம் வரை டிமாண்ட் ஏற்றி பேரம் பேசும் மனநிலையில் காங்கிரஸ் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் திமுக கெடு விதித்தும் இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறது காங்கிரஸ்.

TVK Vijay - தவெக விஜய்

TVK Vijay – தவெக விஜய்

இந்நிலையில், திடீரென இன்று காலை முதல் ஹைதராபாத்தில்ல் ராகுல் காந்தியை சந்தித்து ஆதவ் அர்ஜூனா கூட்டணி குறித்து பேசி வருவதாக செய்தி சேனல்களில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஆதவ் தரப்பில் விசாரிக்கையில் இதை முழுமையாக மறுக்கின்றனர். ஆனால், ‘காங்கிரஸ் வந்தால் மகிழ்வுடன் வரவேற்போம்…’ என்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர்.

காங்கிரஸ் முன்பாக இப்போது 2 ஆப்சன்கள் இருக்கிறது. ஒன்று, திமுகவின் டெட்லைனுக்குள் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு ராஜ்யசபா சீட்டை வாங்க வேண்டும் அல்லது ராஜ்ய சபா சீட்டை தியாகம் செய்து கூடுதல் சீட்டுகளுக்காக இன்னும் முரண்டு பிடித்து பார்க்கலாம்.

அறிவாலயம் விதித்த டெட்லைன் முடியப்போகிறது. காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *