பவர் சென்டர்!
கட்சிக்குள் திரும்பி வர வழி இருக்கிறதா, அவரது அரசியல் எதிர்காலம் என்னவாகும்? – அ இ அதிமுக வின் சீனியர் ஒருவரிடம் பேசினோம்.
”கட்சி அம்மாவின் தலைமையின் கீழ் வந்த புதுசுல கட்சிக்குள் வந்தாங்க. அம்மாவின் உதவியாளரா போயஸ் தோட்டத்தில் நுழைந்தவரை உயிர் தோழி ஆக்கியது காலம். விளைவு நாங்க சின்னம்மான்னு கூப்பிட்டோம்.
கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி அவங்க வச்சதுதான் சட்டம்ன்னு இருந்திச்சு.
‘எம்.எல்.ஏ., எம்.பி. சீட் அமைச்சரவையில் யார் இருக்கணும், யார் இருக்க கூடாது’ தொடங்கி, அரசு நிர்வாகத்தில் ஒப்பந்தப் பணிகள் வரை எல்லாத்தையும் தீர்மானிக்கிற பவர் சென்டரா உருவெடுத்தாங்க.
அம்மா சிறைக்குச் சென்ற சமயங்களில் முதல்வர் பொறுப்பை ஓ.பன்னீர் செல்வம் ஏற்றது தொடங்கி, பின்னாளில் தான் சிறைக்குச் சென்ற போது எடப்பாடி பழனிசாமி அந்தப் பொறுப்பை ஏற்றது வரை கட்சியில் இவங்க கை தான் ஓங்கியிருந்தது.
ஆனால் எல்லாமே அம்மா இருந்த வரைக்கும்தான். அவங்க மறைந்த அடுத்த சில தினங்களில் கிடைத்த சிறைத் தண்டனை எல்லாத்தையும் ஒரே இரவில் காலி செய்துடுச்சு. சிறைவாசத்தை முடிச்சுட்டுத் திரும்பிய போது, எடப்பாடி பழனிசாமி பதவியை அவர்கிட்டத் தரத் தயாராக இல்லை. கட்சியின் முக்கால்வாசி நிர்வாகிகளும் தொண்டர்களும் இவங்களை மறந்தே போயிட்டாங்க.