நெற்பயிரில் மோடி பெயரை வரைந்து காஞ்சி பாஜகவினர் பிறந்தநாள் வாழ்த்து! | Kanchipuram BJP Member Special Birthday Wishes to PM Modi

1376817
Spread the love

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் அவளூரில் நெற்பயிரில் பிரதமர் மோடி பெயரை வரைந்து அந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் பாஜகவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய பாஜகவினர், அவளூர் கிராமத்தில் நெற்பயிரில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை ஆங்கிலத்தில் வரைந்துள்ளனர். பி.எம்.கிசான் திட்டத்தை அமல்படுத்தியது, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 விலை வழங்கியது ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பிரத்யேக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத் தலைவர் சாட்டை பிரபாகரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட பொதுச் செயலாளர் செல்வம், முன்னாள் கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பிரகதீஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *