நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சபாநாயகர் அப்பாவு | Tamil Nadu Speaker Appavu Meets Reporters in Nellai

Spread the love

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சபாநாயகர் அப்பாவு,

“ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றாலும், ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. எனினும், இங்கிருந்து ரூ.45 ஆயிரம் கோடிக்குத்தான் ஏற்றுமதி நடக்கிறது.

ராணுவ தளவாடங்கள் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நான்கு பெரிய தொழிலதிபர்கள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறார்கள்.

அதனால் இந்திய மக்களுக்கு ஒருவருக்கும் லாபம் இல்லை. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்ய நாட்டு பிரதமரை இந்திய பிரதமர் இந்தியா வரவழைத்துள்ளார்.

சோவியத் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டுவர சென்னையில் உள்ள அதானி துறைமுகத்திற்கு கடல் வழியே கொண்டு வரவுள்ளனர். இதனால் 40 சதவீதம் மிச்சம் எனத் தெரிவித்துள்ளதை மகிழ்ச்சியாகக் கருதுகிறோம். ஆனால் எல்லா வகையிலும் இந்தியாவிற்கு பொருளாதார இழப்புதான்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *