நெல்லையில் தீபக்பாண்டியன் வெட்டிக்கொலை

Dddd
Spread the love

நெல்லை மாவட்டம் வாகைக்குளம், மூன்றடைப்பு பகுதியை சேர்ந்தவர் தீபக்ராஜா பாண்டியன்(வயது30). ஏற்கனவே கொலையுண்ட பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.

சாப்பிட வந்தார்

தீபக்ராஜா பாண்டியன் மீது கொலை, கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் சமுதாயம் சார்ந்த பிரச்சினைகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் இன்று(20&ந்தேதி) மதியம் பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் உள்ள பிரபல ஓட்டல் வைர மாளிகையில் சாப்பிட வந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் திடீரென தீபக்ராஜா பாண்டிய¬னை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க தீபக்ராஜா பாண்டியன் முயன்றார்.

வெட்டி படுகொலை

ஆனாலும் சுற்றி வளைத்த மர்ம கும்பல் தீபக்ராஜா பாண்டியனை சரமாரியாக வெட்டினர். அவரது தலையை குறிவைத்து கொடூரமாக வெட்டினர். இதில் அவர் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தடுக்க முயன்ற அவரு இடது கையும் துண்டாகி தொங்கியது.-

தீபக்ராஜா பாண்டியன் இறந்ததை உறுதி செய்த கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தை கண்டு ஓட்டலில் சாப்பிடவந்தவர்கள் மற்றும் சாலையில் சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கொலை நடந்தது பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதி என்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இளம்பெண் கதறல்

தீபக்ராஜா பாண்டியன் ஓட்டலில் சாப்பிட இளம் பெண் ஒருவருடன் வந்து உள்ளார். அவரது கண்முன்பே மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து உள்ளனர். அவர் தீபக்ராஜா பாண்டியனின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிதுதூரம் சாலையில் ஓடி நின்று விட்டது.

அங்கிருந்து கொலையாளிகள் காரில் தப்பிசென்று இருக்கலாம் என்று தெரிகிறது. நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

போலீசார் விசாரணை

தீபக்ராஜா பாண்டியன் கொலையுண்டது பற்றிஅறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் நெல்லை, பாளையங்கோட்டை பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.க்ஷ
யார் இந்த தீபக்ராஜா பாண்டியன்
தீபக்ராஜா பாண்டியனுக்கு ஜாதி ரீதியாக நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ல் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் நெல்லை மாவட்டம் தாழையூத்தில் நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கிலும் தீபக் ராஜாவுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஜாதி மோதல் காரணமா?

எனவே ஜாதி மோதல் காரணமாகவே தீபக் ராஜா கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கொலை நடந்த ஓட்டலில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.இந்த கொலை சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *