சென்னையில் இருந்து நெல்லைக்கு தினந்தோறும் ஏராளமான அரசு விரைவு பஸ்கள், படுக்கை வசதி கொண்ட அரசு ஏ.சி.பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நெல்லையில்
நேற்று இரவு வழக்கம் போல் தூங்கும் வசதி கொண்ட அரசு விரைவு பஸ் புறப்பட்டு சென்றது. சுமார் 20&க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம்செய்தனர். வரும் வழியில் ஒவ்வொரு ஊரிலும் பயணிகள் இறங்கினர். இன்று காலை கடைசி நிறுத்தமான நெல்லையில் பஸ்நின்றதும் பயணிகள் அனைவரும் இறங்கிசென்று விட்டனர்.
இதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டையில் உள்ள பணிமனையில் சுத்தம்செய்ய டிரைவர் பஸ்சை ஓட்டிச்சென்றார்.
ஊழியர்கள் பஸ்சை சுத்தம்செய்து கொண்டு இருந்த போது படுக்கை வசதி கொண்ட இருக்கையில் துப்பாக்கி மற்றும் அரிவாள் இருந்ததை கண்டு அதிர்ச்சிஅடைந்தனர்.
துப்பாக்கி, அரிவாள்
இதுகுறித்து பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
குறிப்பிட்ட இருக்கையை முன்பதிவு செய்த பயணியின் பெயரை ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் பயணம் செய்த நபர் யார்? எங்கிருந்து எந்து ஊர் வரை பயணம் செய்தார். யாரையேனும் தீர்த்து கட்ட அந்த பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்தாரா? அவர் எதிர்பார்த்த நபர் பஸ்சில் வராததால் துப்பாக்கி மற்றும் அரிவாளை மறந்து விட்டு சென்றாரா? என்று விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும் அந்த அரசு பஸ்சில் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்து யாரேனும் ரத்து செய்து உள்ளனரா? என்ற விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள். அரசு விரைவு பஸ்சில் துப்பாக்கி மற்றும் அரிவாள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது–.