நல்லை மாவட்டம் வாகைக்குளம், மூன்றடைப்பை சேர்ந்தவர் தீபக்ராஜா(வயது30). பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளரான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடியாக வலம் வந்து உள்ளார்.
கொலை
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு(20-தேதி) முன்னர் அவர் நெல்லை கே.டி.சி. நகரில் உள்ள வைர மாளிகை ஓட்டலில் வருங்கால மனைவி மற்றும் நண்பர்களுக்கு சாப்பாடு டிரீட் வைத்தார்.
பின்னர் தீபக்ராஜா மட்டும் வெளியே வந்தபோது அங்கு மறைந்து இருந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி ஓட்டல் முன்பே கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். அவரது முகம் முழுவதும் சிதைக்கப்பட்டு இருந்தது. பின்னர் கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இச்சம்பம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை கைது செய்யும் வரை தீபக்ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்க்ள போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியும் இதுவரை அவர்கள் இதனை ஏற்கவில்லை. இதையடுத்து தீபக்ராஜாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து கடந்த 2 நாட்களாக அரசு ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டு உள்ளது.
5 பேர் சிக்கினர்
கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது. ஓட்டலில் முன்பு இருந்த கண்காணிப்பு காமிராவில் கொலைநடந்நது அப்படியே பதிவாகி இருந்தது. கொலையாளிகள் அனைவரும் முகத்தை மறைத்து இருந்ததால் அவர்களது உருவம் சரியாக தெரியவில்லை. இதையடுத்து அப்பகுதியில் கொலை நடப்பதற்கு முன்பு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவு மற்றும் கொலையாளிகள் தப்பிச்சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே தீபக்ராஜா கொலை தொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். அவர்கள் கொலையாளிகள் என்பதை போலீசார் இதுவரை உறுதி செய்யவில்லை. விசாரணை நடைபெற்று வருவதாக மட்டும் தெரிவித்து உள்ளனர். மேலும் பிடிபட்டவர்கள் பற்றிய விபரத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
எப்படி தெரிந்தது
கொலையுண்ட தீபக்ராஜா சமுதாயம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளில் தலையிட்டு உள்ளார். இதனால் அவருக்கு விரோதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. இதனால் அவர் எங்கு செல்கிறார், எப்போது வருவார் என்று யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பாக இருந்து உள்ளார். மேலும் அவர் வெளியே வரும் போது கூட்டாளிகள் 10 க்கும் மேற்பட்டோருடன் தான் வலம் வந்து உள்ளார்.
அப்படி இருக்கும்போது தீபக்ராஜா ஓட்டலுக்கு வந்திருப்பது நெருக்கமான பலருக்கும் தெரியாமல் இருந்து உள்ளது.
ஆனால் எதிர்தரப்பினர் இதனை மோப்பம் பிடித்து தீபக்ராஜாவை தீர்த்து கட்டி விட்டனர். தீபக்ராஜா ஓட்டலில் இருப்பது நெருக்கமான வர்களுக்கே தெரியாத நிலையில் எதிர் தரப்பினருக்கு எப்படி தெரிந்த என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.