நேபாளத்தில் நிலச்சரிவு: திரிசூலி ஆற்றில் 63 பேருடன் அடித்துச்செல்லப்பட்ட பேருந்துகள்!

Dinamani2fimport2f20232f112f232foriginal2ferd23pala 2311chn 124 3.jpg
Spread the love

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நிலச்சரிவு நேரிட்டு, இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பேருந்துகளில் 63 பயணிகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டுப் பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு, சாலையின் பெரும்பகுதி ஆற்றில் வெள்ளப்பெருக்குடன் அடித்துச் செல்லப்பட்டபோது, சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகளும் ஆற்றில் விபந்ததாகக் கூறப்படுகிறது.

பேருந்து ஓட்டுநர்கள் உள்பட இரண்டு பேருந்துகளிலும் 63 பயணிகள் இருந்துள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *